திங்கள், 30 டிசம்பர், 2013

கண்ணீர் அஞ்சலி..







இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 75. தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த இளங்காடு என்ற கிராமத்தில் கடந்த 1938ம் ஆண்டு பிறந்தவர் நம்மாழ்வார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண்மை பட்டப்படிப்பை முடித்த அவர், 1963ம் ஆண்டு கோவில்பட்டியில் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார். அப்போது ரசாயன உரங்களால் மண்ணிற்கும், பயிர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை அறிந்த அவர், விவசாய முறையில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என முடிவு செய்து தனது அரசு வேலையை உதறினார். தொடர்ந்து இயற்கை வேளாண் முறைகளை தமிழகத்தில் பிரபலப்படுத்துவற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். இதன் விளைவாக தற்போது தமிழகத்தில் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு பெருகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் நம்மாழ்வார் என்றால் அது மிகையல்ல. இயற்கை வேளாண் விழிப்புணர்வுக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள நம்மாழ்வார், தமிழக இயற்கை உழவர் அமைப்பு மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் இயக்கம் என்ற இயக்கங்களையும் நடத்தி வந்தார். உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், இன்று பட்டுக்கோட்டையை அடுத்த அத்திவெட்டியில் காலமானார்.
 

புதன், 18 டிசம்பர், 2013

உணவில் கலப்படம்...! இப்போது உரத்திலும் கலப்படமா...!!!


போலி குடிநீர், போலி ரூபாய் நோட்டுகள்,  போலி மருந்துகள்,  போலி பத்திரங்கள் என இந்தப் போலிகள் பட்டியலில் இப்போது போலி உரங்கள்...ஏற்கனவே ஊட்டச் சத்துக்குறைவான ரசாயன உணவுகளை சாப்பிட்டு பல்வேறு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளோம்,
இந்நிலையில் இந்தச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.


செய்தி: தினமலர் (18-12-13)
 

திங்கள், 11 நவம்பர், 2013

நம்ம சென்னையில் ஒரு மூலிகை உணவகம்..!


சமீப காலமாக இயற்கை உணவுகள் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் சற்று அதிகமாக காணப்படுகிறது. ஒரு பக்கம் தொற்று நோய்கள், சுகாதாரமின்மை, உணவுப் பொருட்களில் கலப்படம், என்று எங்கும் எதிலும் கலப்படம். இயற்கை உணவுகளை ஒதுக்கி விட்டு, செயற்கையாய் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு, நம்மில் பலருக்கு சிறுதானிய உணவுகள் மற்றும் அதன் சத்துக்கள் பற்றி அறவே தெரிந்து இருக்க வாய்ப்பே இல்லை. சென்னை மாநகராட்சி அலுவலக ரிப்பன் பில்டிங் வளாகத்தில் செயல்பட்டு வரும் மூலிகை உணவகத்தில், சிறுதானிய உணவு வகைகளும், மூலிகை சூப் வகைகளும் பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
 
 
சிறுதானியங்களைக் கொண்டும் அனைத்து விதமான உணவு வகைகளையும் (இட்லி முதல் பீட்சா வரை) எளிதாகவும், சுவையாகவும், சத்தாகவும் சமைக்க முடியும். சென்னை மாநகராட்சி நகரில் பல்வேறு இடங்களிலும் இந்த மூலிகை உணவகங்களை திறந்தால் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெறும்.
Thanks: Dinamalar.
 

புதன், 30 அக்டோபர், 2013

புவி வெப்பமயமாதலில் விவசாயத்தின் பங்கு




இரசாயன உரங்களை அறவே தவிர்த்து, இயற்கை முறை விவசாயத்திற்கு மாறுவோம்..

 

திங்கள், 28 அக்டோபர், 2013

இது நம்ம பூமி.

இயற்கையை நேசிக்கும் இனிய கீதம்...



Thanks: Raindropss Team.

நம்பிக்கை ” வெற்றியோடு வரும்.
வெற்றி ” நம்பிக்கை உள்ளவருக்கு மட்டுமே வரும்.


 

வெள்ளி, 25 அக்டோபர், 2013

“மரத் தமிழன்” - நடிகர் விவேக்.



நடிகர் விவேக், பசுமை கலாம் அமைப்புடன் இணைந்து தமிழகத்தில்பல்வேறு இடங்களில் இதுவரை சுமார் 19 இலட்சம் மரக் கன்றுகளை நட்டுள்ளார். மேலும் திரு. அப்துல் கலாம் அவர்களின் ஆலோசனையின் பேரில் ஒரு கோடி மரக்கன்றுகள் நட்டு வளர்க்கவும் திட்டமிட்டுள்ளார்.

உங்கள் பசுமைப் பயணம் வெற்றி பெற " ஆர்கானிக் முத்ராவின் " நல்வாழ்த்துக்கள்..

நாமும் நம்மால் முடிந்த அளவு மரக்கன்றுகளை நடுவோம். பசுமையை பெருக்குவோம்..
 
நடப்பட்ட மரங்கள் பராமரிக்கப்படுகின்றனவா என்பதையும் அவ்வப்போது கவனித்துக் கொள்ளுங்கள்…
விவேக் சார்.. J

பசுமை கலாம் இயக்கம் பற்றி தெரிந்துகொள்ள http://www.greenkalam.in

Thanks: Daily thanthi.

உண்ணும் உணவு உடலளவு பாயும்..
எண்ணும் எண்ணம் உலகளவு பாயும்.



 

வியாழன், 24 அக்டோபர், 2013

இனி பனை மரத்தின் கீழே நின்று பால் குடிக்க முடியாது…!


ஒரு கோடி பனை மரங்கள் அழிப்பு.



இராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் ஒரு கோடி பனை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக பத்திரிகை செய்தி.. மிகவும் கவலையடையச் செய்த செய்தி. வீட்டு மனைப் பிரிவுகளுக்காகவும், பனைச் சட்டங்களுக்காகவும்
இந்த மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக செய்தி தெரிவிக்கிறது. மரங்களை வெட்டும் வேட்டை இப்படியே தொடர்ந்தால்…இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் பனை மரங்களே இல்லாமல் போய்விடும். உடலுக்கு குளிர்ச்சி தரும் நுங்கு, பனை வெல்லம், ஓலை விசிறிகள், பனங்கற்கண்டு போன்ற பனைப் பொருட்கள் இனி அரிதாகிவிடும். அந்தக் காலத்தில் பனை மரத்தடியில் நின்று பாலைக் குடித்தாலும் கள்ளுதான், என்று ஒரு பழைய பழமொழி உண்டு.  இனி இந்த பழமொழிகள் எல்லாம் வழக்கொழிந்து விடும்.இனி பனை மரம் இருந்தால் தானே கள்ளு குடிக்க..? பால் குடிக்க..?
 

Thanks: Dinamalar.
 

களத்தில் இறங்கியது மாணவர் படை...!! (பகுதி 2)

 
 
களமிறங்கிய மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்..!
Thanks: Dailythanthi.
 
 
இளைஞர்கள் பயன்படாதவர்கள் அல்ல.,
பயன்படுத்தப்படாதவர்கள்.
 

களத்தில் இறங்கியது மாணவர் படை...!! (பகுதி 1)


புதன், 23 அக்டோபர், 2013

நம்பிக்கை விதை விதைக்கிறார் - பாமயன்.



வேளாண் பொருளியல் நிபுணர் பாமயன். இவருடன் ஒரு மணி நேரம் பேச விட்டுக் கேட்டால், 'மூட்டை முடிச்சைக் கட்டிக்கிட்டு ஊருக்குக் கிளம்பிரலாமா?' என்று நகரத்தில் வேலை பார்க்கும் எந்த விவசாயி வீட்டுப் பிள்ளையும் நினைப்பான். அழிவின் விளிம்பில் நிற்கும் விவசாயத்தின் மீது நம்பிக்கை விதை விதைக்கிறார் பாமயன்.

Thanks: Vikatan Web TV

நீ செல்லும் பாதையில் தடைகள் ஏதும் இல்லையென்றால்...அது நீ செல்லும் பாதையல்ல,
யாரோ ஒருவர் சென்ற பாதை.

Go Green... (கோ க்ரீன்...)



இன்றைய மாறிவரும் நாகரீக உலகில் நாம் இயற்கை வளங்களை அழித்து செயற்கையாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பசுமை சூழல் மறைந்து எங்கும் கான்கிரீட் காடுகளாகி விட்டது.
நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால், மிகவும் அதிகமாக மாசுபட்டதென்னவோ இயற்கைதான்… நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்ச பூதங்களும் அதிவேகமாக மாசடைந்து கொண்டிருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால்…. என்ன ஆகும்.? அது பற்றி நமக்னென்ன..? எவ்வளவோ பார்த்து விட்டோம்…இதை பார்க்க மாட்டோமா என்ன..? பார்க்கத்தான் போகிறோம்…
 
இந்த மாசுபட்ட பூமியின் சுற்றுச் சூழலுக்கு நாமே முக்கியப் பொறுப்பு. நம்மால் இயன்றவரை இயற்கையை பாதுகாப்போம்.. நீர், நில வள ஆதாரங்களைக் காப்போம்… இயற்கை வளங்களை காப்பதன் மூலம் மட்டுமே நாம் முழுமையான ஆரோக்கியமான வாழ்க்கை வாழமுடியும்.  நம்மால் இயன்ற சிறு சிறு முயற்சிகளை இன்றே துவங்கிடுவோம்..
 
 
இந்த வலைத்தளம், சுற்றுச்சூழல், இயற்கை வேளாண்மை, இயற்கை உணவு முறைகள், மற்றும் பல சுவாரசியமான தகவல்களை உங்களுக்கு வழங்கிடும்.
 
மரம் வளர்ப்போம்… பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்… தண்ணீரை சேமிப்போம். மண்வளம் காப்போம். இரசாயன உரங்கள் தவிர்ப்போம்.
 
நிரந்தரமான மகிழ்ச்சி 

நம்மை நாமே கேள்வி கேட்பதில் இருக்கிறது
நம்மை நாமே விமர்சிப்பதில் இருக்கிறது
நம்மை நாமே திருத்துவதில் இருக்கிறது
நம்மை நாமே பாராட்டுவதில் இருக்கிறது