வெள்ளி, 24 ஜனவரி, 2014

வரவேற்பு பெற்ற இணையதள நேரலை..!

சென்னை புத்தகக் காட்சி அரங்கில் நாள்தோறும் மாலையில் நடைபெறும் நிகழ்ச்சிகள் இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. வீட்டிலிருந்தபடியே பலர் நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர். ஆண்டிராய்டு மொபைல் போன்கள், ஐ போன்களிலும் நிகழ்ச்சிகளைக் காணமுடிந்தது.
முதன் முறையாக இந்த வருடம் நேரடி ஒளிபரப்பு வசதி தொடங்கப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது. இணைய தள ஒளிபரப்பை பாராட்டி பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள் அனைவருக்கும் நன்றி..!

நேரடி ஒளிபரப்பு வசதி ஏற்பாடு: “ஆர்கானிக் முத்ரா”
 



 

வியாழன், 23 ஜனவரி, 2014

புத்தகக் காட்சி நிறைவு நாள். (22-01-14)

சென்னையில் 13 நாட்களாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இனிதே நிறைவு பெற்றது. சுமார் 10 இலட்சம் வாசகர்கள் புத்தக காட்சியை கண்டு களித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பதிப்பகத்துறையில் 25 ஆண்டுகளாக பணியாற்றும் பதிப்பாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி நீதியரசர் ராமசுப்பிரமணியன் மற்றும் நல்லி குப்புசாமி செட்டியார் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார்கள். புத்தக காட்சியின் வெற்றிக்கு பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையதளங்கள் மூலம் சிறப்பாக பணியாற்றிய நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

 

இந்த வருடம் ”ஆர்கானிக் முத்ரா” (அரங்கு எண் 674) இயற்கை விவசாயம், சிறு தானிய உணவுக் குறிப்புகள், சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வுக்கான புத்தகங்கள் விற்பனை செய்தது. மேலும் மரம் வளர்த்தல், குடிநீர் சேமிப்பு, பிளாஸ்டிக் உபயோகம் தவிர்த்தல், உயிரைக் கொல்லும் பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்ற தலைப்புகளில் படங்கள் (போஸ்டர்) ஆங்காங்கே ஒட்டப்பட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்
சிறப்பாக செய்திருந்தது.
 
750 அரங்குகள், 5 இலட்சம் தலைப்புகள், 10 இலட்சம் வாசகர்கள்….இந்தப் புத்தகத் திருவிழாவில் இடம் பெற்றது.  வானொலி, தொலைக்காட்சி, சினிமா, இணைய தளங்கள் என பல்வேறு பொழுது போக்கு அம்சங்களுக்கிடையே புத்தகம் வாங்கவும், வாசிக்கவும் வாசகர்களிடையே ஆர்வம் பெருகி வருவது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துவரும் பெருந்திரளான கூட்டத்திலிருந்து தெரிகிறது.
இத்தகைய மாற்றம் வரவேற்கத்தக்கது.


புத்தகம் என்பது நாம் புரட்டுபவையாக மட்டும் இருக்கக் கூடாது.
நம்மை புரட்டிப் போடுபவையாக இருக்க வேண்டும்.

 
 
 



செவ்வாய், 21 ஜனவரி, 2014

சென்னை புத்தகக் காட்சி நேரடி ஒளிபரப்பு..!


37வது சென்னை புத்தகக் காட்சியில் தினமும் மாலையில்
நடைபெறும் நிகழ்ச்சிகள் சிறப்பு அழைப்பாளர்களின் சிறப்புரைகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பல்வேறு எழுத்தாளர்கள்,  படைப்பாளிகளின் உரைகளை தினமும் நேரில் சென்று கேட்பது அனைவருக்கும் இயலாது.
” ஆர்கானிக் முத்ரா ” அனைவரும் நிகழ்ச்சிகளை ரசிக்கும்
வண்ணம் இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்துள்ளது.  நிகழ்ச்சிகளை கண்டுகளியுங்கள்.. கருத்துக்களை தெரியப்படுத்துங்கள்..

உங்கள் கருத்துக்களை கீழ்க்கண்ட மின்னஞ்சலில்
தெரிவிக்கலாம்.
omgreencafe@gmail.com

 
 
நாம் நம்ப வேண்டும் என்பதற்காக அல்ல, ஆழ்ந்த விசாரணையில் ஈடுபட வேண்டும் என்பதற்காகத்தான்
புத்தகங்கள் எழுதப்படுகின்றன.
 
ஒரு புத்தகத்தைப் பொறுத்தவரை, அது என்ன சொல்கிறது
என்று பார்க்கக் கூடாது; அது என்ன உணர்த்துகிறது என்றுதான் பார்க்க வேண்டும்.
- உம்பெர்த்தோ ஈகோ


 

வெள்ளி, 3 ஜனவரி, 2014

சென்னை புத்தகக் கண்காட்சி




சென்னை புத்தக கண்காட்சி ஜனவரி 10 முதல் 22 வரை
நந்தனம் YMCA வளாகத்தில் நடைபெறுகிறது.


வாழ்க்கையின் அடிப்படை தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைக்கு தரவேண்டும் என்றார் பேரறிஞர் அண்ணா.  நல்ல நூல்களே சிறந்த நண்பர்கள்
என்று சொல்வார்கள், அப்படிப்பட்ட நல்ல புத்தகங்களை
(நண்பர்களை) ஒரே இடத்தில் காண்பதற்கு புத்தக காட்சிக்கு வாருங்கள்... நல்ல நண்பர்களை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுகள்.
 

வியாழன், 2 ஜனவரி, 2014

புத்தாண்டு வாழ்த்துக்கள்...!

அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..

புத்தாண்டில் பல்வேறு கடமைகள், புதிய சவால்கள், பொறுப்புக்கள், சாதனைகளை செய்ய ஆவலுடன்  காத்திருப்போம், அத்துடன் பிளாஸ்டிக் உபயோகத்தை படிப்படியாக முடிந்த அளவு கைவிடுவோம்.  சுற்றுச் சூழல் மாசுபடுவதை தடுப்போம், தண்ணீரை சேமிப்போம்.  மரங்கள் நடுவோம்,
இந்த வருடம் முதல் இயற்கையை காப்பதிலும் சற்று கவனம் செலுத்துவோம்...
நம்மால் முடியும்,. முயற்சிப்போம்.