வியாழன், 30 ஜூலை, 2015

கனவு நாயகனுக்கு கண்ணீர் அஞ்சலி



கனவு நாயகன், இளைஞர்கள், மாணவர்களின் அறிவுச் சுடரை தூண்டியவர்..
இந்தியாவின் பெருமை, உங்கள் கனவெனும் ஏவுகனையில் எங்களின் பயணம் தொடரும்...

எங்களின் கண்ணீர் அஞ்சலி...








திங்கள், 4 மே, 2015

ரசாயன உரங்களால் உற்பத்தி குறைவு..

ரசாயன உரங்களைப் பயன்பத்துவதன் மூலம் வேளாண் உற்பத்தி குறைந்து வருவதாகவும், மண்ணின் வளமும், நலமும் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும்

சென்னையில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான சுற்றுச்சூழல் தொடர்பான கருத்தரங்கில் சுற்றுச் சூழல் ஆய்வாளர் அகமது இஸ்மாயில் கூறினார்.


செய்தி: தினமணி, 25-11-2014.
 

செவ்வாய், 27 ஜனவரி, 2015

சென்னை புத்தகக் காட்சி 2015

38வது சென்னை புத்தக் காட்சி இந்த ஆண்டு ஜனவரி 9 முதல் 21 வரை சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக் கணக்கான புத்தகங்கள், பல்லாயிரக் கணக்கான வாசகர்கள் என சென்னை புத்தக திருவிழா இனிதாக நிறைவு பெற்றது.


எங்களது ஸ்டால் எண் 612A. (F5 Green)  இந்த ஆண்டு சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வுக்காகவும், இயற்கை விவசாயத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும் பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள்,
மற்றும் போஸ்டர்கள் விற்பனை செய்யப்பட்டன.





இயற்கை வேளாண்மை,  இயற்கை உணவுகள், சிறுதானியங்களின் மருத்துவ பயன்கள்,  சிறுதானிய சமையல் குறிப்புகள்,  மற்றும் சுற்றுச் சூழல், தண்ணீர் சிக்கனம், பிளாஸ்டிக் தீமைகள் போன்ற பல்வேறு தலைப்பு புத்தகங்களை அனைவரும் விரும்பி வாங்கிச் சென்றனர்.

புத்தகக் காட்சியில்  பார்வையாளர்கள் அனைவரிடத்திலும் இயற்கையை காக்க வேண்டும், சுற்றுச் சூழலை காக்க வேண்டும் என்கிற ஆர்வமும், விழிப்புணர்வும் அதிகரித்து வருகிறது என்பது நன்கு தெரிந்தது.


வியாழன், 1 ஜனவரி, 2015

புத்தாண்டு வாழ்த்துக்கள்..!!

புதிய ஆண்டு, புதிய சிந்தனைகள், புதிய தீர்மானங்கள், புதிய முயற்சிகள், என்று அனைவரது நல்ல எண்ணங்களும்,  நல் முயற்சிகளும் இந்த ஆண்டில் வெற்றி பெற நல் வாழ்த்துக்கள்...